Home
Mobile

இது Phone இல்ல மினி DSLR.. விற்பனையில் வெளுத்து வாங்க போகும் புது VIVO போன்.. 200MP கேமரா, Zeiss APO லென்ஸ்!

விவோ (Vivo) நிறுவனம் தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போனை எப்போது அறிமுகம் செய்யும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதோடு சேர்த்து, இதன் சிப்செட், கேமராக்கள், சாஃப்ட்வேர் மற்றும் டியின் போன்ற முக்கிய விவரங்களையும் விவோ வெளியிட்டுள்ளது

விவோ எக்ஸ் போல்ட் 6 வெளியீட்டு தேதி: பல வாரங்களாக வெளியான லீக்ஸ் தகவல்களை தொடர்ந்து, விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ் போல்ட் 6ஸ்மார்ட்போனை, சீனாவில் வருகிற ஜூன் 26 அன்று மாலை 7:00 மணிக்கும் (CST) - இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு - அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது Phone இல்ல மினி DSLR.. 200MP கேமரா, Zeiss APO லென்ஸ்!

இந்த அறிவிப்பை தொடர்ந்து சீனாவில் உள்ள முக்கிய ஆன்லைன் தளங்களில் விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த ஸ்மார்ட்போனை முன்கூட்டியே வாங்குபவர்கள் அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்று, விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனை இலவசமாக வெல்லும் வாய்ப்பையும் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: விவோ நிறுவனம் அதன் எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனை ஒரு போல்டபிள் மினி டிஎஸ்எல்ஆர் (Foldable mini DSLR) என்று சந்தைப்படுத்துகிறது. இதன் கேமரா அமைப்புதான் இதன் மிக முக்கிய சிறப்பம்சமாகும். இதில் 200எம்பி சென்சாருடன், போல்டபிள் போன்களிலேயே முதன்முறையாக Zeiss APO சூப்பர் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் விவோவின் Blueprint V3+ இமேஜிங் சிப் மற்றும் Vivo Zeiss G2 டெலிகன்வெர்ட்டர் (teleconverter) ஆதரவும் இதில் உள்ளது; இது ஃபோக்கல் லென்த்தை (focal length) 200மிமீ-க்கு இணையான அளவிற்கு நீட்டித்து, சிறந்த ஜூம் திறனை வழங்குகிறது. இதெல்லாம் சேர்ந்து - விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த கேமரா திறனுக்கு பெயர் பெற்ற அதன் நிறுவனத்தின் மற்ற முதன்மை நிலை (flagship) போன்களுக்கு இணையாக உயர்த்துகிறது.

வடிவமைப்பை பொறுத்தவரை, டீப்-சீ சிங்க்ஹோல்களிலிருந்து (deep-sea sinkholes) ஈர்க்கப்பட்ட புதிய ப்ளூ ஹோல் (Blue Hole) ஃபினிஷ் உடன் இது வருகிறது. வட்டமான மூலைகள் மற்றும் பிளாட் ஆன விளிம்புகளை கொண்ட 2.5D மெட்டல் ஃபிரேம் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இதன் இரண்டு ஸ்க்ரீன்களிலும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஒளிரும் பொருட்கள் (luminescent materials) பயன்படுத்தப்பட்டுள்ளன; அதே சமயம் இன்னார் ஸ்க்ரீனில் சாம்சங்g-ன் M14 தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது மேம்பட்ட பிரகாசம் மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது MediaTek Dimensity 9500 Super Edition சிப்செட் மூலம் இயங்குகிறது. போல்டபிள் போன்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிப்செட் இது என்று விவோ நிறுவனம் கூறுகிறது. முந்தைய மாடலை விட இதில் NPU செயல்திறன் 111 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மின் நுகர்வு 56 சதவீதம் குறைந்துள்ளதாகவும் விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது OriginOS 6 Fold மற்றும் மேம்பட்ட மல்டிடாஸ்கிங்கிற்கான மேம்படுத்தப்பட்ட Atomic Workbench ஆகியவற்றுடன் வருகிறது.

கிஸ்பாட்டின் கருத்து: தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, போல்டபிள் போன்கள் குறித்த நீண்டகால கவலைகளான கேமரா மற்றும் உற்பத்தித்திறன் (productivity) ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்வதன் மூலம், விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போன் தனது போட்டியாளர்களுக்குக் கடும் சவாலை அளிக்கும் என்று தெரிகிறது.

பெரிய அளவிலான பேட்டரியுடன் வருவதால், வரவிருக்கும் கேலக்சி இஸட் போல்ட் 8 (Galaxy Z Fold 8) போன்ற போட்டியாளர்களை விட விவோ எக்ஸ் போல்ட் 6 சிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா தரத்தில் உள்ள சமரசங்கள் காரணமாக போல்டபிள் போன்களைத் தவிர்த்து வந்த வாடிக்கையாளர்களுக்கு, இப்போது இவற்றை மீண்டும் பரிசீலிக்க ஒரு வலுவான காரணம் கிடைக்கலாம்.

சிறந்த கேமரா வசதிகள் கொண்ட போல்டபிள் போனுக்காகக் காத்திருக்கும் மொபைல் போட்டோகிராஃபி ஆர்வலராக நீங்கள் இருந்தால், எக்ஸ் போல்ட் 6 மாடலை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம்; ஆனால் முடிவெடுப்பதற்கு முன், அதன் முழுமையான அம்சங்கள் மற்றும் உலகளாவிய விலை விவரங்கள் வெளியாகும் வரை காத்திருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 6 Foldable Mini DSLR With 200MP Camera China Launch Date June 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X