அதிரவிடும் விலை.. 6500mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது புதிய Vivo போன்கள்.. எந்த மாடல்?
விவோ எக்ஸ் போல்டு 5 (Vivo X Fold 5) மற்றும் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஆகிய இரண்டு போன்கள் வரும் ஜூலை 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த இரண்டு போன்களின் விலை குறித்த தகவல்களை ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ரூ.54,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.59,999-ஆக இருக்கலாம். மேலும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்டு 5 போன் ரூ.1,49,999 விலையில் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான விவோ எக்ஸ்200 எப்இ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 எப்இ அம்சங்கள் (Vivo X200 FE specifications): விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் 6.31-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2640 x 1216 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன்(resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் எஸ்ஒசி (MediaTek Dimensity 9300+ SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஒஎஸ் (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.
அதேபோல் விவோ எக்ஸ்200 எப்இ போனில் ZEISS கேமரா செட்டப் உள்ளது. அதன்படி 50எம்பி சோனி ஐஎஸ்எக்ஸ்921 மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த விவோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த விவோ போனில் உள்ளது.
இந்த விவோ ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் மேம்பட்ட AI அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 எப்இ. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.
6500mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 7, புளூடூத் 5.4, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








