வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. 6000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 80Wசார்ஜிங்.. எந்த மாடல்?
கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ் போல்டு 5 (Vivo X Fold 5) போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தற்போது டீசர் வெளியாகி உள்ளது. ஆனாலும் எந்த தேதியில் வெளியிடப்படும் என்று விவோ நிறுவனம் இன்றும் உறுதிப்படுத்தவில்லை.
வரும் வாரங்களில் விவோ எக்ஸ் போல்டு 5 போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த புதிய விவோ போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது விவோ எக்ஸ் போல்டு 5 மாடலின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ் போல்டு 5 அம்சங்கள் (Vivo X Fold 5 Specifications): 8.03-இன்ச் இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 x 2200 பிக்சல்கள், யூடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசல்யூஷன், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 6.53 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கவர் அமோலெட் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2748 x 1172 பிக்சல்கள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் விவோ எக்ஸ் போல்டு 5 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் விவோ எக்ஸ் போல்டு 5 இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 50எம்பி 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் 15எம்எம் போகல் லென்த், 3X ஆப்டிகல் ஜூமிங், ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. டூயல் 5ஜி, புளூடூத் வி5.4, வைஃபை 7, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போனில் உள்ளது.
6000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்டு 5 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பின்பு இந்த புதிய விவோ போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications