மிரண்டு போன மார்க்கெட்.. 100W சார்ஜிங்.. 512GB மெமரி.. 64MP கேமரா.. அறிமுகமானது Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ (vivo X Fold3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 100 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங், 50எம்பி கேமரா, 512ஜிப மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை, சலுகைகள், விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ அம்சங்கள் (vivo X Fold3 Pro specifications): 8.03-இன்ச் 2கே இ7 அமோலெட் எல்டிபிஒ (2K+ E7 AMOLED LTPO) மெயின் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 6.5-இன்ச் கவர் டிஸ்பிளேவும் இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், UTG கிளாஸ், 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோ ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல் இந்த போனில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி OV50H மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் + 64எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் (In-display ultrasonic fingerprint sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.IPX8 ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம்.
5700எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் (100W fast charging), 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (50W wireless charging) மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த பேட்டரயை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 802.11 ax), புளூடூத் 5.4 எல்இ (Bluetooth 5.4 LE), ஜிபிஎஸ்(GPS), யுஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் செலஸ்டியல் பிளாக் (Celestial Black) நிறத்தில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும்.
விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ போனின் விலை ரூ.1,59,999-ஆக உள்ளது. வரும் ஜூன் 13-ம் தேதி முதல் இந்த போன் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனின் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி விவோ எக்ஸ் போல்ட்3 ப்ரோ போனை வாங்கினால் ரூ.15,000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








