Home
Mobile

ஃபர்ஸ்ட் டைம் அறிமுகம்.. பார்த்து பண்ணுங்க.. ஆபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த VIVO-வின் புதிய போன்!

இந்திய சந்தையில் அறிமுகமாகும் விவோ நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro) ஆனது தற்போது இந்திய விற்பனையையும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய 2 இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் வாங்க கிடைக்கிறது. போல்டபிள் பிரிவில் மிகவும் மெலிதான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கேமரா மற்றும் டிஸ்பிளே அம்சங்களில் வலுவான கவனம் செலுத்தும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் நேர்த்தியான, ஸ்டைல் ஆன வடிவமைப்பையும் பெற்றுள்ளது. விவோவின் இந்த லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போனின் விலை என்ன? இதன் மீது கிடைக்கும் விற்பனை சலுகைகள் என்னென்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஆபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த VIVO-வின் புதிய போன்!

விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோவின் இந்திய விலை நிர்ணயம்: இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,59,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வேறு எந்த ஸ்டோரேஜ் ஆப்ஷனையும் கொண்டிருக்கவில்லை.

முன்னரே குறிப்பிட்டபடி இது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு ரூ.15,000 வரையிலான வங்கி தள்ளுபடியும் (Bank Offer), ரூ10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchang Bonus) கிடைக்கும்.

விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோவின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் 2கே (2200 x 2480 பிக்சல்ஸ்) அமோஎல்இடி இன்னர் போல்டபிள் டிஸ்பிளே (Inner Foldable Display) மற்றும் 6.53-இன்ச் (1172 x 2748 பிக்சல்ஸ்) அமோஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவை (Outer Display) கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, விவோ எக்ஸ் போல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 9 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடனாக 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டு உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ஸெய்ஸ்-பிராண்டட் கேமரா யூனிட்டை (Zeiss-branded camera unit) கொண்டுருக்கும். செல்பீகளுக்காக இன்னர் மற்றும் அவுட்டர் டிஸ்பிளேக்களில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்களை கொண்டுருக்கும்.

கடைசியாக இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,700mAh பேட்டரியை பேக் செய்யும். மடிக்கும்போது 11.2மிமீ தடிமனை கொண்டதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் வழியாக விவோ நிறுவனமானது ஒரு இலகுரக கார்பன் ஃபைபர் கீலையும் ( lightweight carbon fiber hinge) அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய போட்டியாளர் ஆன ஒன்பிளஸ் ஓப்பனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பனின் இன்னார் டிஸ்பிளேவாகும்.

வெளிப்புறத்தில் 10ஹெர்ட்ஸ் - 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் இது சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,39,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 3 Pro India Sale Started Via Flipkart Amazon Check Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X