இது நடந்தா., 2023 Vivoக்கு சொந்தம்: எந்த ஒரு புது போனும் வாங்காம வெயிட் பண்ணுவது நல்லது!

|

விவோ தனது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான விவோ எக்ஸ் ஃபோல்ட் மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்ட்+ ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இதையடுத்து விவோவின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Vivo X Fold 2 குறித்த புதிய கசிவுத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Vivo X Fold 2

Vivo X Fold 2

Vivo X Fold 2 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2K தெளிவுத்திறன் உடன் கூடிய ஃபோல்டபிள் டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போல் இது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஃபோல்டபிள் பகுதியிலும் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

அதேபோல் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் Vivo X Fold 2 வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல டிப்ஸ்டர் டிஜிட்டல் நிலையம், சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளமான வெய்போவில் Vivo X Fold 2க்கான சில எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் இயங்கும் எனவும் 2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளே இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் அல்ட்ராசோனிக் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

OIS ஆதரவு

OIS ஆதரவு

அதேபோல் வரவிருக்கும் விவோ ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் கூடிய சோனி IMX866 முதன்மை கேமரா இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. Vivo X Fold தோற்றம் மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

X Flip உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு

X Flip உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு

Vivo X Fold 2 ஸ்மார்ட்போனானது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் X Flip உடன் அறிமுகம் செய்யப்படலாம் என டிப்ஸ்டர் தரவு தெரிவிக்கிறது. இதன் முந்தைய மாடல் ஆன விவோ எக்ஸ் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Vivo X Fold+ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

50 எம்பி முதன்மை சென்சார்

50 எம்பி முதன்மை சென்சார்

Vivo X Fold ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2K+ (1,916x2,160 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 8.03-இன்ச் Samsung E5 ஃபோல்டிங் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. Vivo X Fold ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி முதன்மை சென்சார் உடன் குவார் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

AMOLED பிரைமரி டிஸ்ப்ளே வசதி

AMOLED பிரைமரி டிஸ்ப்ளே வசதி

அதேபோல் Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் AMOLED பிரைமரி டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பிரைமரி டிஸ்ப்ளே 2கே ஆதரவு, 1,916x2,160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இது 1,080x2,520 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவோ போனில் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதி இருப்பதால் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறமுடியும்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் Adreno 730 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறனை வழங்கும் இந்த விவோ ஸ்மார்ட்போன். OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது.

4730 எம்ஏஎச் பேட்டரி

4730 எம்ஏஎச் பேட்டரி

இந்த Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 8எம்பி periscope கேமரா என்கிற குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 16எம்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த விவோ போன்.

Best Mobiles in India

English summary
Vivo X Fold 2 Smartphone Might Launching at First Half of 2023 With Snapdragon 8 Gen 2 SoC: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X