டிஸ்பிளே கிங்குனே பேரு வைக்கலாம் போலயே.. டக்கரான 2 டிஸ்பிளே உடன் Vivo X Flip அறிமுகம்!
கேமராவுக்கு பெயர் பெற்ற விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், இரண்டு டிஸ்பிளேக்களை கொண்ட தனது எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ஃபிளிப் பட்டியலில் வித்தியாசமான டிசைனை கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், மற்ற அம்சங்களும் டிஸ்பிளே ரேஞ்சுக்கு ஈடுகொடுக்குமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள். அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தொடர்ந்து புதுப்புது டிசைன்களில் தங்களது போன்களை தயாரித்து மார்க்கெட்டில் களமிறக்கி வருகின்றன. அண்மை காலமாக ஃபிளிப் போன் ரகங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இவற்றில் ஓப்போ (Oppo), சாம்சங் (Samsung), விவோ (Vivo) நிறுவனங்கள், தங்களது தனித்துவமான டிசைன்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், விவோ எக்ஸ் ஃபிளிப் போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் சாம்சங் கேலக்ஸி செட் ஃபிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4), ஓப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் (OPPO Find N2 Flip) போன்றவற்றில் இருந்து சற்று வித்தியாசமான செகண்டரி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் (2520 × 1080 பிக்சல்கள்) FHD+AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வெளிவந்துள்ளது. செகண்டரி டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 3 இன்ச் (682 × 422 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் உள்ளது.
இந்த டிஸ்பிளேவின் தனித்துவம் என்னவென்றால், முதன்மை டிஸ்பிளேவை போலவே இதுவும் கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே (Curve Edge Display) டிசைனை கொண்டுள்ளது. சொல்லப்போனால், கர்வ் எட்ஜ் டிஸ்ப்ளே பலருக்கு விருப்பமானதாக இருக்கும். இதனால் விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் நல்ல விற்பனையை எட்ட வாய்ப்புள்ளது.
அதேபோல விவோ எக்ஸ் ஃபிளிப் போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் / சிப்செட்டை கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. குறிப்பாக, விவோ எக்ஸ் ஃபோல்ட் 2 (Vivo X Fold 2) போனை போலவே, விவோ எக்ஸ் ஃபிளிப் போனும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வெளிவந்துள்ளது.
கேமராவை பொறுத்தவரை 50MP பிரைமரி கேமரா (12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கேமரா அடங்கும்) மற்றும் 32MP செல்பீ கேமரா உள்ளது. பொதுவாக, ஃபிளிப் போன்களுக்கு இன்-டிஸ்பிளேவில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்படுவது கிடையாது. பெரும்பாலும் சைடு மௌண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களே பயன்படுத்தப்படுகிறது.
ஏனென்றால், இந்த போன்கள் இரண்டு டிஸ்பிளேக்களை கொண்டிருப்பதால், இரண்டிற்கும் சேர்த்து சைடு மௌண்டெட் ஆக கொடுக்கப்படுகிறது. அதேபோல இந்த போனிலும் சைடு மௌண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரே உள்ளது. அதேபோல டைப் சி (Type C) சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. இந்த போர்ட்டை ஆடியோ ஜாக்கெட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த போட்டுக்கு பக்கத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவோ எக்ஸ் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மொத்தமாக 198 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் 4,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. அதற்காக 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக லேவண்டர், பிளாக் மற்றும் கோல்டு ஆகிய 3 கலர்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ எக்ஸ் ஃபிளிப் போனின் விலை ரூ. 79,990 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








