Home
Mobile

16எம்பி டூயல் ரியர் கேமராவுடன் விவோ வி9 யூத் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

இந்தியாவில் விவோ வி9 ஸ்மார்ட்போன் ஆனது அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து தற்சமயம் விவோ நிறுவனம் விவோ வி9 யூத் என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ வி9 யூத் என்ற ஸ்மார்ட்போன் மாடல். மேலும் விவோ வி9 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.22,990-ஆக உள்ளது, ஆனால் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பிளிப்கார்ட், அமேசான், விவோ இ-ஸ்டோர், போன்ற ஆன்லைன் வலைதளங்களில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 விவோ வி9 யூத்:

விவோ வி9 யூத்:

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இனச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080
பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 யூத்.

ஸ்னாப்டிராகன் 450:

ஸ்னாப்டிராகன் 450:

விவோ வி9 யூத் சாதனம் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப் சென்சார் போன்ற பல்வேறு சென்சார் அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏஆர் ஸ்டிக்கர் போன்ற
பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு மற்றும் தங்க நிங்களில் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 விலை:

விலை:

விவோ வி9 ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப்
பொறுத்தவரை ரூ.18,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V9 Youth With Snapdragon 450 SoC Launched at Rs 18,999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X