Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் விவோ வி9 யூத்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

விவோ நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனத்தின் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வி9 யூத்:

விவோ வி9 யூத்:

விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இனச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 யூத்.

ஸ்னாப்டிராகன் 450:

ஸ்னாப்டிராகன் 450:

விவோ வி9 யூத் சாதனம் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.வீடியோ
கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப் சென்சார் போன்ற பல்வேறு சென்சார் அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏஆர் ஸ்டிக்கர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு மற்றும் தங்க நிங்களில் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இந்த 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V9 Youth gets a second price cut of Rs 1000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X