நேற்றுவரை சீன நிறுவனமான சியோமியின் பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருந்த விவோ, இனி ஆப்பிள் நிறுவனத்தையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளது. ஆம், ஐபோன் எக்ஸ் வடிவமைப்பிலான அதன் விவோ வி9 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் 20கே என்கிற மிட்-ரேன்ஜ் பட்ஜெட் பிரிவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

எப்போதும் போல், விவோ ஒரு ஈர்க்கக்கூடிய 24எம்பி அளவிலான செல்பீ கேமராவை இக்கருவியில் இணைத்துள்ளது. முன்னர் வெளியான விவோ வி7 தொடர் போலல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ஆனது சில கெளரவமான அம்சங்களை கொண்டுள்ளது. அவைகள் என்னென்ன.? இக்கருவியின் கிடைக்கும் தன்மை மற்றும் இந்திய விலை நிர்ணயம் என்ன.? போன்றவைகளை விரிவாக காண்போம்.
இந்திய விலை நிர்ணயம்.?
பிரபல இ-காமர்ஸ் தலமான அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் விவோ வி9 ஆனந்தின் இந்திய விலை நிர்ணயம் ரூ.22,900/- ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் மீது காதல் கொண்டு, அதன் விலை வரம்பு காரணமாக அதை வாங்க முடியாத இந்தியர்கள், விவோ வி9 ஸ்மார்ட்போன் பால் ஈர்க்கப்பட்டால் அது ஆச்சாரியப் படுவதற்கில்லை.
24எம்பி செல்பீ கேமரா.!
அம்சங்களை பற்றி பேசுகையில், வி9 ஆனது எப் / 2.0 துளை மற்றும் ஃபேஸ் அன்லாக்ட் பயன்முறை கொண்ட 24எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில், ஒரு 16எம்பி முதன்மை சென்சார் மற்றும் ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பு வழங்குகிறது.
போர்ட்ரெயிட் மோட்; ஏஆர் ஸ்டிக்கர்கள்.!
இதன் கேமராவானது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பிறரால் போர்ட்ரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்க உதவுமென்பது குறிப்பிடத்தக்கது. உடன் இதன் செல்பீ கேமராவில் ஏஆர் (AR) ஸ்டிக்கர்கள் போன்ற பல புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்துமே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படுகின்றன.
6.3 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே.!
விவோ வி9 ஆனது, 2280 x 1080 பிக்சல்கள் என்கிற தீர்மானம் கொண்ட 6.3 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. அதாவது 19: 9 என்கிற திரை விகிதம் கொண்டுள்ளதென்று அர்த்தம். இதன் விளைவாகத்தான் விவோ வி9 ஆனது ஒரு மிக மலிவான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி.!
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் மூலம் இயக்கப்படும் இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைந்துள்ளது. சேமிப்பு விரிவாக்கத்திற்கான ஒரு கலப்பு மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஒன்றும் உள்ளது. ஸ்னாப்ட்ராகன் 626 மொபைல் மேடையில் இயங்கும் சில ஸ்மார்ட்போன்களில் விவோ வி9 கருவியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2.!
அனைத்து உலோக வடிவமைப்பு கொண்டிருந்தாலும், 150 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் (துரதிருஷ்டவசமாக இன்னும்) மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
3260எம்ஏஎச் பேட்டரி.!
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச்(FunTouch) ஓஎஸ் 4.0 கொண்டு இயங்கும் இக்கருவியின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.விவோ வி9 ஒரு 3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. முன்னர் கூறியபடி, ரூ.22,990/- அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கும் இக்கருவியானது மொத்தம் மூன்று வண்ண விருப்பங்களில் அணுக கிடைக்கும். முன்பதிவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலைப்பாட்டில், இதன் டெலிவரியானது ஏப்ரல் 2 முதல் தொடங்கும்
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.