இந்தியா: பட்ஜெட் விலையில் விவோ வி9 ப்ரோ அறிமுகம்: (அம்சங்கள் & விலை).!
4ஜி வோல்ட்இ,ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், வைஃபை 802.11,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது,பின்பு 3060எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இல்லை.
விவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மேலும் அந்தவரிசையில் விவோ வி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஏஆர் ஸ்டிக்கர், செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள், பேஸ் அன்லாக் போன்ற பல்வேறு சிறப்புகள் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு இவற்றுள் இடமபெற்றுள்ளது.
விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 12மெகாபிக்சல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி வோல்ட்இ,ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், வைஃபை 802.11,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது,பின்பு 3060எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இல்லை.

இந்த ஸ்மார்ட்போனின் எடைப் பொறுத்தவரை 150கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ரூ.17,990 விலையில் இந்த அட்காசமான விவோ வி9 ப்ரோ மாடலை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications