அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9.!

விவோ வி9 ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.22,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.20,990-க்கு விற்பனைக செய்யப்படுகிறது.

|

விவோ வி9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் விவோ நிறுவனம் இப்போது புதிய அறிவப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ வி9 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9.!

விவோ வி9 ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.22,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.20,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இப்போது விவோ வி9 ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வி9:

விவோ வி9:

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி.! விரிவான அம்சங்களை பொறுத்தமட்டில், விவோ வி9 ஆனது 2280 x 1080 பிக்சல்கள் மற்றும் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஒரு 6.3 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கும். உடன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுருக்கும்.

 இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது:

இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது:

விவோ வி9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமான 24எம்பி செல்பீ கேமரா பற்றி பேசுகையில், ஏஆர் ஸ்டிக்கர்ஸ், ஏஐ ஃபேஸ் மோட், ஏஐ ஃபேஸ் அன்லாக் மற்றும் பலபுதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பின்பக்கத்தை பொறுத்தமட்டில், இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது ஒரு 16எம்பி முதன்மை சென்சார் மற்றும் 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச்:

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச்:

இக்கருவியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொக்கே விளைவுகள் கிடைக்குமென்றும், அதற்கு காரணமான ஸ்மார்ட்போனின் செயற்கை நுண்ணறிவு உதவுமென்றும் விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் துரதிருஷ்டவசமாக, யூஎஸ்பி டைப்-சி போர்ட் இடம்பெறவில்லை. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச் (FunTouch) ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஒரு நல்ல விடயமாகும்.

 3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது:

3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது:

அளவீட்டில் விவோ வி9 ஆனது 7.89 மிமீ தடிமன் மற்றும் 150 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. கைரேகை ஸ்கேனர் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு 3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V9 Price in India Dropped to Rs 20990: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X