மார்ச் 27: பட்ஜெட் விலையில் வெளிவரும் அசத்தலான விவோ வி9.!
விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் அசத்தலான டூயல் ரியர் கேமரா மற்றும் பெஸல்லெஸ் டிஸ்பிளே அம்சங்களுடன் விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகத் திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ 9 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஐபோன் எக்ஸ் பின்புற கேமராவும் விவோ வி9 பின்புற கேமராவும் ஒரே மாதிரியான அம்சத்தைக் கொண்டுள்ளது.
வரும் மார்ச் 27-ம் தேதி இந்த அட்டகாமான விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். மேலும் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660:
விவோ வி9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கைரேகை ஸ்கேனர்:
மிகவும் அதிகம் எதிர்பார்த்த கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
இந்த விவோ வி9 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.25,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா 24மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ வி7 ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பெஸல்லெஸ் டிஸ்பிளே :
விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

செல்பீ கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.


நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் விவோ வி7 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.18.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications