மார்ச் 23: அசத்தலான விவோ வி9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் இப்போது அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் வரும் மார்ச் 23-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி9 ஸ்மார்ட்போன் மார்ச் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நாளில் பகல் 3மணி முதல் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கும் என அமேசான் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160பிக்சல்தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது விவோ வி9 ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு
8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த விவோ வி9 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும்; எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யூஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

விவோ வி9 ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைமதிப்பு ரூ.25,000-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo, Vivo V9, Amazon India , March 23, specs, more, smartphone, Technology, News, India, விவோ வி9, அமேசான் , ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X