Home
Mobile

ரூ.22,990/-க்கு இதை விட சிறப்பான கேமரா ஸ்மார்ட்போன் கிடைக்காது.!

விவோ வி9-ஐ நம்பி வாங்கலாமா.? ரூ.23,000/-க்கு மதிப்பானதா.?

By Muthuraj

விவோ நிறுவனத்தின் புதிய அறிமுகமான வி9 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை மற்றும் விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 2, 2018) முதல் ஆப்லைனில் வாங்க கிடைக்கும் விவோ வி9, வருகிற ஏப்ரல் 5 முதல் அமேசான், ப்ளிப்கார்ட், பேடிம் மற்றும் விவோ இ-ஸ்டோர்களில் வாங்க கிடைக்கும்.

ரூ.22,900/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள விவோ வி9 ஸ்மார்ட்போனின் அறிமுகம் விற்பனையில் சில சுவாரசியமான தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. அவைகள் என்னென்ன.? விவோ வி9-ஐ நம்பி வாங்கலாமா.? ரூ.23,000/-க்கு மதிப்பானதா.?

ரூ.2,000/- மதிப்பிலான கேஷ்பேக்.!

ரூ.2,000/- மதிப்பிலான கேஷ்பேக்.!

ஒரு சேமிப்பு மாறுபாட்டில் - 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு - மட்டுமே கிடைக்கும் விவோ வி9-ஐ முன்பதிவு செய்யும் நபர்களுக்கு, ஒன் டைம் ஸ்க்ரீன் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை பெறுவார்கள். உடன் ரூ.2,000/- மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ வாய்ப்பும் அணுக கிடைக்கும்.

ரூ.2,299/- கேஷ்பேக்.!

ரூ.2,299/- கேஷ்பேக்.!

உடன் பேடிஎம் வழியாக 'VIVOV9' என்கிற குறியீட்டைப் பயன்படுத்த ரூ.2,299/- கேஷ்பேக்கை பெறலாம். அமேசானில் 5% ரொகேஷ்பேக் கிடைக்கிறது. உடன் விவோ இ-ஸ்டோர் மற்றும் அமேசான் ஆகியவைகள் புக்மைஷோ வழியிலான ஒரு ஜோடி திரைப்பட டிக்கெட்டுகளையும் சலுகையில் குறிப்பிட்டுள்ளன.

விவோ வி9 அம்சங்கள்.!

விவோ வி9 அம்சங்கள்.!

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு கொண்ட விவோ வி9 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட பன்டச் (Funtouch) ஓஎஸ் 4.0 கொண்டு இயங்குகிறது. ஒரு 19: 9 என்கிற திரை விகிதம் கொண்ட 6.3 அங்குல முழு எச்டி+ (1080x2280 பிக்சல்கள்) ஐபிஎஸ் புல் வியூ டிஸ்பிளே 2.0 கொண்டுள்ளது.

16, 5, 24 மெகாபிக்சல்.!

16, 5, 24 மெகாபிக்சல்.!

சுமார் 90 சதவிகித ஸ்க்ரீன்-டூ-படி விகிதத்தை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. ஒரு 16-மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முறையே எப் / 2.0 மற்றும் எப்2 /4 அப்பெர்ஷர்களுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் கேமரா ஒரு 'அல்ட்ரா எச்டிஆர்' பயன்முறையையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு எப் / 2.0 துளை உடனான ஒரு 24 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

போர்ட்ரேட் லைட்டிங் மற்றும் பொக்கே எபெக்ட்.!

போர்ட்ரேட் லைட்டிங் மற்றும் பொக்கே எபெக்ட்.!

சமீபத்திய கேமரா ஸ்மார்ட்போன் டிரெண்ட் ஆன ஒரு 'போர்ட்ரேட்' லைட்டிங் எபெக்ட் மற்றும் பொக்கே எபெக்ட் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன், ஏஐ அடிப்படையிலான வீடியோ கால் பியூடிப்பை, மற்றும் 'ஏஆர் ஸ்டிக்கர்களை' கொண்டுள்ளது. வி9 ஆனது பேஸ் அக்சஸ் 2.0 உடன் வருகிறது, இது பேஷியல் ரிகக்னைசேஷனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவுகிறது. இந்த அம்சம், ஆப்ஸ்களை லாக் செய்யவும் உதவும்.

மூன்று வண்ண விருப்பங்கள்.!

மூன்று வண்ண விருப்பங்கள்.!

மொத்தம் மூன்று வண்ண விருப்பங்கள் வாங்க கிடைக்கும் (சாம்பெய்ன் கோல்ட், பேர்ல் பிளாக், மற்றும் சாப்பையர் ப்ளூ) விவோ வி9-ன் இதர அம்சங்களை பொறுத்தவரை, 64ஜிபி, மைக்ரோ எஸ்டி கார்ட் வழியிலான 256ஜிபி மெமரி நீட்டிப்பு, 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக், மைக்ரோ- யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள், 150 கிராம் எடை, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இல்லாத 3260எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V9 Goes on Sale in India, Now Available via Offline Stores: Price, Specifications, Offers . Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X