Subscribe to Gizbot

24எம்பி செல்பீ; 6.3 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம்; நாளை முதல் இந்தியாவில்.!

Written By:

செல்பீ கேமராவில் புதுமைகளை புகுத்தி இந்திய (செல்பீ) ஸ்மார்ட்போன் பிரியர்களை கவர்ந்திழுத்த விவோ நிறுவனம், இந்தியாவில் அதன் விவோ வி9 ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்யவுள்ளது. விவோ வி9 தான் இந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24எம்பி செல்பீ; 6.3 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம்; நாளை முதல் இந்தியாவில்

எனினும் கூட இந்திய வெளியீட்டு முன்னர், விவோ வி9 ஆனது தாய்லாந்தில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது மற்றும் பிலிப்பைன்ஸில் இன்று அறிமுகமாகவுள்ளது. விவோ வி9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே, அதன் ஏஐ அம்சங்கள் கொண்ட 24எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ கேமரா மற்றும் ஒரு பெரிய 6.3 அங்குல டிஸ்பிளே (19: 9 என்கிற திரை விகிதம்) தான்,

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மிட்-ரேன்ஜ் சாதனங்களில் இடம்பெறக்கூடியவைகள் தான் என்றாலும் கூட, விவோ நிறுவனத்தின் இந்திய விலை நிர்ணயமானது சற்று அதிகமாகவே இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.25,000/- என்கிற பிரிவின் கீழ் வெளியாகலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி.!

விரிவான அம்சங்களை பொறுத்தமட்டில், விவோ வி9 ஆனது 2280 x 1080 பிக்சல்கள் மற்றும் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட ஒரு 6.3 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கும். உடன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுருக்கும்.

விலை நிர்ணயம்.?

விலை நிர்ணயம்.?

இக்கருவியானது, ஸ்னாப்டிராகன் 626 மொபைல் பிளாட்பார்ம் இயக்கத்தின்கீழ், இந்தியாவில் வெளியாகும் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிப்செட் திறன் மற்றும் 3ஜிபி ரேம் மாறுபாட்டில் கிடைக்காது என்கிற காரணத்தினாலும் விவோ வி9 ஸ்மார்ட்போனின் ரூ.25,000/- என்கிற விலை நிர்ணயம் நியாப்படுத்தப்படலாம். இதற்கு முன்னர் மோட்டோ இசெட்2 ப்ளே மற்றும் டென்னர் டி ஆகியஇரு கருவிகள் மட்டுமே ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி கொண்டு இயங்குகின்றன.

இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.!

இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.!

விவோ வி9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமான 24எம்பி செல்பீ கேமரா பற்றி பேசுகையில், ஏஆர் ஸ்டிக்கர்ஸ், ஏஐ ஃபேஸ் மோட், ஏஐ ஃபேஸ் அன்லாக் மற்றும் பலபுதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பின்பக்கத்தை பொறுத்தமட்டில், இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதாவது ஒரு 16எம்பி முதன்மை சென்சார் மற்றும் 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச்.!

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச்.!

இக்கருவியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொக்கே விளைவுகள் கிடைக்குமென்றும், அதற்கு காரணமான ஸ்மார்ட்போனின் செயற்கை நுண்ணறிவு உதவுமென்றும் விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் துரதிருஷ்டவசமாக, யூஎஸ்பி டைப்-சி போர்ட் இடம்பெறவில்லை. ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச் (FunTouch) ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஒரு நல்ல விடயமாகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.!

3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.!

அளவீட்டில் விவோ வி9 ஆனது 7.89 மிமீ தடிமன் மற்றும் 150 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. கைரேகை ஸ்கேனர் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு 3260எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. அமேசான் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் இதன் அதிகாரபூர்வமான விலையை பற்றி தெரிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Vivo V9 Goes Official With 24MP Selfie Camera and 6.3-inch Notch Display. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot