எவ்ளோ நாள் ஆனாலும் பரவால! இந்த புதிய Vivo 5ஜி போனுக்காக ஒற்றை காலில் தவம் கிடக்கும் மக்கள்! என்ன ஸ்பெஷல்?
விவோ வி27 ஸ்மார்ட்போனுக்கு அடுத்து விவோ வி29 5ஜி (Vivo V29 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். அதாவது இந்த விவோ விவோ வி29 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தற்போது FCC சான்றிதழ் இணையதளத்தில் இந்த விவோ வி29 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த போனின் மாடல் எண் V2250 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் வெளியான இந்த விவோ வி29 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அம்சங்கள்: அதாவது விவோ வி9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4505எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவில் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு 5ஜி, எல்டிஇ, புளூடூத், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் அறிமுகாகும்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த விவோ வி9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ வி9 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த விவோ போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி9 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும். குறிப்பாக விவோ வி9 5ஜி போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
விரைவில் அறிமுகமாகும் விவோ வி9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரமான கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த புதிய விவோ போன். அதேபோல் விவோ வி9 5ஜி மாடல் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு: அதாவது பிளிப்கார்ட் தளத்தில் விவோ Y56 5ஜி போனுக்கு 20 சதவீதம் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ Y56 5ஜி மாடல் ஆனது தற்போது ரூ.19,999-விலையில் கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
6.58-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு விவோ Y56 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த 50எம்பி டூயர் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








