அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. 7200எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ வி80 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ வி80 அம்சங்கள் (Vivo V80 Specifications): 6.59-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி80 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2750 × 1260 பிக்சல்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
OriginOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 (Android 17) இயங்குதள வசதியுடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
விவோ வி80 போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி80 ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த விவோ போனின் எடை 203 கிராம் ஆகும். சன்ரைஸ் Anthem, ஹொரைசன் ப்ளூ, ஸ்டெல்லர் பிளாக் ஆகிய கலர்களில் இந்த விவோ போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் எடை 203 கிராம் ஆகும்.

விவோ வி80 விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி80 மாடலின் விலை ரூ.62,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி80 மாடலின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ வி80 மாடலின் விலை ரூ.79,999-ஆக உள்ளது.
இந்த விவோ வி80 போனின் முன்பதிவு இன்று தொடங்குகிறது. வரும் அக்டேபார் 13-ம் தேதி அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
