போட்டான் பாரு விவோ.. SONY கேமரா.. 100X ஜூமிங்.. 7200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலாக வெளியாக இருக்கும் விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஏற்கனவே, பீச்சர்கள் உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது விலை விவரங்களும் தெரியவந்துள்ளதால், கஸ்டமர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.63,000ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.70,000ஆகவும் இருக்கப் போகிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.80,000ஆக இருக்கலாம். இந்த விலை விவரங்களை விவோ நிறுவனம் உறுதி செய்யவில்லை.

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த விவோ வி80 ஸ்மார்ட்போனானது, பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்காது என்பது தெரிகிறது. மிட்-ரேஞ்ச் மற்றும் மிட்-பிரீமியம் ஸ்மார்ட்போன்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும். முழு பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன.
விவோ வி80 அம்சங்கள் (Vivo V80 Specifications): 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் (Autofocus) கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. இதிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இருப்பதால், 50 எம்பி நைட் டெலிபோட்டோ கேமரா, 4கே சினிமாடிக் வீடியோ (4K Cinematic Video), 4கே 60 எப்பிஎஸ் வீடிய (4K 60 fps Video) பீச்சர்கள் உள்ளன.
இதுபோக ஏஐ கிரியேட்டிவ் கேமரா (AI Creative Camera), லைவ் ஸ்டிக்கர் கோலாஜ் (Live Sticker Collage), ஏஐ தீபாவளி போர்ட்ராய்டு 2.0 (AI Diwali Portrait 2.0), தீபாவளி ஃபிரேம் (Diwali Frame) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ வி80 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
7200mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், ஐஆர் சென்சார் (IR Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. ஸ்டெல்லர் பிளாக், அரிசோன் ப்ளூ மற்றும் சன்ரைன் ஆன்த்தம் ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாகும். அக்டோபர் 6ஆம் தேதியில் இதே பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
