Home
Mobile

Vivo ஒரே போடு.. 50MP ZEISS நைட் டெலிபோட்டோ கேமரா.. OIS டெக்னாலஜி.. SONY சென்சார்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும்படியான பீச்சர்களுடன் விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. 50 எம்பி ஜீஸ் நைட் டெலிபோட்டோ கேமரா மட்டுமல்லாமல், அண்டர்வாட்டர் வீடியோகிராபி, ஏஐ தீபாவளி போர்ட்ராய்டு 2.0 உள்ளிட்ட பீச்சர்களுடன் பட்டையை கிளப்ப இருக்கிறது.

வருகிற அக்டோபர் 6ஆம் தேதி இந்திய மார்கெட்டில் இந்த விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்பாகவே ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. விவோ மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இதில் கேமரா பீச்சர்கள் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Vivo ஒரே போடு.. 50MP ZEISS நைட் டெலிபோட்டோ கேமரா.. OIS டெக்னாலஜி!

ஏனென்றால், சோனி லைட்டியா 700வி சென்சாருடன் 50 எம்பி ஜீஸ் ஓஐஎஸ் மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி ஜீஸ் நைட் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Autofocus), 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது.

மேலும், 100எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 8 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி ஜீஸ் செல்பீ கேமரா உள்ளது. ரியர் கேமராவில் 4கே 60 எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஆகவே, சினிமாடிக் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஜீஸ் 100எம்எம் சென்டர்-ஸ்டேஜ் போர்ட்ராய்டு (ZEISS 100 mm Center-Stage Portrait) கிடைக்கிறது.

ஏஐ லைட்னிங் உள்ளிட்ட அவுட்புட்களுடன் ஏஐ கிரியேட்டிவ் கேமரா (AI Creative Camera) பீச்சர்கள் கிடைக்கிறது. அண்டர் வாட்டர் வீடியோகிராபி மற்றும் போட்டோகிராபி கிடைக்கிறது. இதுபோக லைவ் ஸ்டிக்கர் கோலாஜ் (Live Sticker Collage) சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தியர்களுக்கு பிரத்யேகமாக ஏஐ தீபாவளி போர்ட்ராய்டு 2.0 (AI Diwali Portrait 2.0) கிடைக்கிறது.

ஆகவே, இந்திய லைட்னிங்களுக்கு ஏற்ப என்ஹான்ஸ் செய்யப்பட்ட போட்டோக்களை எடுத்து கொள்ள முடியும். அதோடு தீபாவளி ஃபிரேம் (Diwali Frame) கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படி கேமராவில் மிரளவிட்டு இருக்கிறது. மற்ற பீச்சர்களை பொறுத்தவரையில், 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.59 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. ஓர்ஜின் ஓஎஸ் 7 கொண்ட மாடலாக இந்த விவோ வி80 இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.

ஐஆர் சென்சார் (IR Sensor) கிடைக்கிறது. ஸ்டெல்லர் பிளாக், அரிசோன் ப்ளூ மற்றும் சன்ரைன் ஆன்த்தம் கலர்களில் கிடைக்க இருக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரி கிடைக்கிறது. விலை விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.63,000ஆக இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V80 With 50MP ZEISS Night Telephoto Camera Launching in India on October 6 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X