Home
Mobile

அப்படி போடு.. 10000எம்ஏஎச் பேட்டரி.. செப்.3-ல் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி80 லைட் (Vivo V80 Lite) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 3-ம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி80 லைட் அம்சங்கள் (Vivo V80 Lite Specifications): டைமன்சிட்டி 7360 டர்போ (Dimensity 7360-Turbo) சிப்செட் உடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அப்படி போடு.. செப்.3-ல் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

அதேபோல் 6.83-இன்ச் டிஸ்பிளே உடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் விவோ வி80 லைட் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி போடு.. செப்.3-ல் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

10000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ வி80 லைட் மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.

photo credits: vivo, gizmochina

Best Mobiles in India

English summary
Vivo V80 Lite with 10000mAh battery launch date revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X