Home
Mobile

விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 10000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி80 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo V80 Lite 5G specifications): 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ், 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

 விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7300இ (Dimensity 7300e)சிப்செட் உடன் விவோ வி80 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்852 மெயின் கேமரா + 2எம்பி bokeh சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் விவோ வி80 லைட் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்க ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளது.

அதேபோல்IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் புதிய விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எமரால்டு கிரீன், ஆப்டர்குளோ பிங்க், டான் பிளாக் ஆகிய கலர்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

 விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ வி80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

விவோ வி80 லைட் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை விவோ நிறுவனம். கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும். அதேபோல் இந்த விவோ வி80 லைட் 5ஜி போன் மற்ற நாடுகளில் விவோ எஸ்2 எப்இ எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V80 Lite 5G launched in Malaysia : check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X