அடேங்கப்பா இவ்வளவு விலையா? 50எம்பி கேமரா.. ஒஎல்இடி டிஸ்பிளே.. வருகிறது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் விவோ வி80 (Vivo V80) ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ வி80 அம்சங்கள் (Vivo V80 Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் விவோ வி80 போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 1.07 பில்லியன் கலர்ஸ், 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இருப்பதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுவும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற வசதிகளும் இந்த போனில் இருக்கும்.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளிவரும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.
இந்த விவோ போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ வி80 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: vivo, Amazon,


Click it and Unblock the Notifications
