அடுத்த விவோ 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. 7200எம்ஏஎச் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி80 எப்இ 5ஜி (Vivo V80 FE 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் V2624 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இந்த புதிய விவோ வி80 எப்இ 5ஜி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த போனின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி80 எப்இ 5ஜி அம்சங்கள் (Vivo V80 FE 5G specifications): 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட் உடன் விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் சிறந்த கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய விவோ போனில் உள்ளது.
200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவும் இந்த புதிய விவோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credit: telecomtalk, 91mobiles


Click it and Unblock the Notifications
