ஒரே நேரத்தில் 2 புதிய VIVO போன்கள்.. Snapdragon சிப், Zeiss கேமரா, 6500mAh பேட்டரி, IP69 ரேட்டிங்!
விவோ வி70 சீரீஸ் (Vivo V70 Series) ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) என்கிற 2 மாடல்களும் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட்களால் இயக்கப்படும் என்பதும், விவோ வி70 மற்றும் விவோ வி70 லைட் ஆகிய இரண்டுமே ஸெய்ஸ் (Zeiss) ரியர் கேமரா செட்டப்பை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ வி70 ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் 1.5K டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். விவோ வி70 சீரீஸில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி இடம்பெறலாம் மற்றும் இது IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்களுடன் வரலாம்
கேமராக்களை பொறுத்தவரை விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி ரியர் கேமரா, 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் குறிப்பிடப்படாத அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலம்.
இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டு விட்டாலும் கூட, விவோ நிறுவனம் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை, இது வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை விவோ வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியாவில் ரூ.55,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
பிப்ரவரி 2026 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
மேலும் ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மற்றும் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மாடல்களும் வருகின்றன. ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வருகிற பிப்ரவரி 4, 2026 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 24, 2026 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனும் பிப்ரவரி 2026 ல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாத வாக்கில் கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பிக்சல் மாடல் ஆனது வெளியாகி இருக்கும். ஆகவே இந்த ஆண்டும் அதை நாம் எதிர்பார்க்கலாம்
இதேபோல ஆப்பிள் ஐபோன் 17இ (Apple iPhone 17e) மாடலும் பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஆப்பிளின் 2026 பட்ஜெட் விலை ஐபோன் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ கடந்த ஆண்டு பிப்ரவரியில் வந்தது, ஆக ஐபோன் 17இ மாடலும் அதே லான்ச் டைம்லைனை பின்பற்றும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது


Click it and Unblock the Notifications








