மிட்-ரேஞ்ச் மிரளுது.. OLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. ZEISS ஆப்டிக்ஸ் கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித் தூக்கும்படியான பீச்சர்களுடன் விவோ வி70 சீரிஸ் (Vivo V70 Series) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வெளியீட்டுக்கு முன்பாகவே ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்க இருப்பது தெரிகிறது. இந்த விவோ வி70 சீரிஸ் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி விவோ வி70 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Lite) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளே உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த நேரத்தில் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் எக்ஸ் தளத்தில் விலைகள் கசிந்துள்ளன.

விவோ வி70 சீரிஸ் விலை (Vivo V70 Series Price): விவோ வி70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.49,999ஆகவும் இருக்கிறது. விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,999ஆகவும் இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,999ஆகவும் இருக்கிறது. ப்ரீ-புக்கிங் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிக்குள் தொடங்க இருக்கிறது. இந்த மாடல்களின் விற்பனை பிப்ரவரி 25 முதல் 28 ஆம் தேதிக்குள் தொடங்க இருக்கிறது. இந்த விவரங்களே டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
விவோ வி70 சீரிஸ் அம்சங்கள் (Vivo V70 Series Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை விவோ வி70 எலைட் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட்டை விவோ வி70 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைக்க உள்ளது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் 2.0 கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு 4டி வைப்ரேஷன் கொடுக்க எக்ஸ்-ஆக்சிஸ் லீனயர் மோட்டார் உள்ளது. ஐபி68 & ஐபி69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 1.5K அல்ட்ரா ஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 459 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 ஜீஸ் ஆப்டிக்ஸ் மெயின் கேமரா கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ கேமரா, 50 எம்பி நைட் டெலிபோட்டோ கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஏஐ ஆடியோ நாய்ஸ் எரைசர் (AI Audio Noise Eraser) கிடைக்கிறது. ஏஐ ப்லோரல் பிளஸ்சிங் (AI Floral Blessing), ஏஐ ஹோலி போர்ட்ராய்டு (AI Holi Portrait), வெட்டிங் ஸ்டைல் 2.0 (Wedding Style 2.0), ஏஐ மேஜிக் வெதர் (AI Magic Weather) பீச்சர்கள் கிடைக்கிறது.
ஓர்ஜின்ஓஎஸ் 6 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. பேஷன் ரெட் (Passion Red) மற்றும் லெமன் எல்லோ (Lemon Yellow) ஆகிய கலர்களில் விவோ 70 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பேஷன் ரெட் (Passion Red), ஆதன்டிக் பிளாக் (Authentic Black) மற்றும் சாண்ட் பெய்ஜ் (Sand Beige) ஆகிய கலர்களில் விவோ 70 எலைட் ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


Click it and Unblock the Notifications








