Home
Mobile

அதிரவிடும் விலை.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. பிப்.19-ல் இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் விவோ வி70 (Vivo V70) ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விவோ வி70 ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

விவோ வி70 விலை: 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி70 போன் ரூ.45,999- விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.48,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.52,999 விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதிரவிடும் விலை.. பிப்.19-ல் இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்..

விவோ வி70 5ஜி அம்சங்கள் (Vivo V70 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி70 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

விவோ வி70 ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி70 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரவிடும் விலை.. பிப்.19-ல் இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்..

மேலும் 6500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன். ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V70 price leaked ahead of February 19th launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X