Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சமீபத்தில் உலக சந்தையில் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையல் இந்த புதிய விவோ போன் இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் 6.83 இன்ச் இன்ச் Q10+ அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் விவோ வி70 எப்இ போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய விவோ போனில் உள்ளது.

அதுவும் OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த போனில் உள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக 7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, யூஎஸ்பி டைப்-சி போர்ட், என்.எஃப்.சி, ஜி.பி.எஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

அதேபோல் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் இ-சிம் சப்போர்ட் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போன் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V70 FE India launch Timeline, Price And Specifications Tipped
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X