கொஞ்சம் கேப் விடுங்க Vivo.. அடுத்த 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?
சமீபத்தில் இந்தியாவில் விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன்கனை அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 28-ம் தேதி உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதேபோல் இந்த போன் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. டூயல் ரியர் கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதி இந்த போனில் உள்ளன. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் உடன் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதாவது ஏஐ டிராவல் போர்ட்ராய்டு (AI Travel Portrait), ஏஐ ரீடச் (AI Retouch), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஃபிலிம் போட்டோ மோட் (Film Photo Mode) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. மியூஸ் பர்பிள் (Muse Purple), ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver)நிறங்களில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும்.
ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ வி70 எப்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய விவோ போன் ரூ.28,999 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
photo credits: passionategkeez, herzindagi


Click it and Unblock the Notifications