மார்க்கெட் அதிர போகுது.. புது Vivo 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) ஸ்மார்ட்போன்கள் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். இந்நிலையில் புதிய விவோ வி70 எப்இ (Vivo V70 FE) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.
அதாவது புதிய விவோ வி70 எப்இ போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): 200எம்பி ரியர் கேமரா உடன் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6.83-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(144Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ (MediaTek Dimensity 7360 Turbo) சிப்செட் உடன் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

7000mAh பேட்டரி வசதி இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ வி70 எப்இ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: Passionategeekz


Click it and Unblock the Notifications