புதிய விவோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்.. AMOLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய விவோ வி70 எலைட் போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ வி70 எலைட் அம்சங்கள் (Vivo V70 Elite specifications) : 6.59-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில எச்ஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Octa Core Snapdragon 8s Gen 3) சிப்செட் உடன் விவோ வி70 எலைட் போன் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதி புதிய விவோ போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன். மேலும் ஆரா லைட் (Aura light), 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளன இந்த போனின் ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியாகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதி புதிய விவோ போனில் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனில் உள்ளன. பேஷன் ரெட் (Passion Red), ஆதன்டிக் பிளாக் (Authentic Black) மற்றும் சாண்ட் பெய்ஜ் (Sand Beige) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 194 கிராம் ஆகும்.
விவோ வி70 எலைட் விலை: 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.51,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.56,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.61,999 விலையிலும் வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. மேலும் விவோ.காம், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த போனின் முன்பதிவு தொடங்கியது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications