தலைவா இந்த ரூ.500, ரூ.1000 லாம் இல்ல.. ஸ்ட்ரெயிட்டா ரூ.4000-ஆ.. VIVO போன்கள் விலை உயர்ந்தன.. எந்த மாடல்கள்?
விவோ (Vivo) நிறுவனம் தனது பிரபலமான வி சீரீஸின் (V Series) கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒய் சீரிஸின் (Y Series) கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் என மொத்தம் 4 மாடல்களின் விலைகளை உயர்த்தி உள்ளது. என்ன மாடல்கள்? பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:
வி சீரிஸின் கீழ் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) மற்றும் விவோ வி70 (Vivo V70) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்விரு போன்களும் பிரீமியம் மிட்-ரேஞ்ச் (premium mid-range) பிரிவை சார்ந்தவை. முன்னதாக விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 ஆகவும், விவோ வி70 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999 ஆகவும் இருந்தது.

தற்போது, இவ்விரு போன்களின் விலையும் ரூ.4,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ரூ.54,999 இல் இருந்து ரூ.58,999 ஆக விலை உயர்ந்து உள்ளது. இதேபோல 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு, ரூ.59,999 க்கு பதிலாக தற்போது ரூ.63,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வி70 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது எலைட் மாடலுக்கு ஒரு மலிவு விலை மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு ரூ.49,999 க்கு விற்கப்பட்ட விவோ வி70 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் விலை உயர்வுக்கு பிறகு தற்போது ரூ.53,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரூ.53,999 க்கு கிடைத்த 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.56,999 ஆக உயர்ந்துள்ளது.
ஒய் சீரிஸின் கீழ் விவோ ஒய்21 (Vivo Y21) மற்றும் விவோ ஒய்400 (Vivo Y400) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், விவோ ஒய்21 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது ரூ.20,999 க்கு விற்கப்பட்டது, ஆனால் தற்போது விவோ இந்தியாவின் இணையதளத்தில் ரூ.21,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டுகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கடைசியாக விவோ ஒய்400 ஸ்மார்ட்போன் உள்ளது. இது இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. முன்பு ரூ.28,999 க்கு விற்கப்பட்ட 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட், இப்போது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி + 256ஜிபி வேரியண்டை ஆனது ரூ.3,000 விலை உயர்வுக்கு பிறகு ரூ.31,999 இல் இருந்து ரூ.34,999 ஆக விலை உயர்ந்துள்ளது.
விரைவில் விவோ ஒய்500 4ஜி அறிமுகம்: விவோ நிறுவனம் 8000mAh பேட்டரி + 4ஜி சப்போர்ட் என்கிற சுவாரசியமான காம்பினேஷனில் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது விவோ ஒய்500 4ஜி (Vivo Y500 4G) மாடல் ஆகும்.
இது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்500 5ஜி மாடலின் 4ஜி வேரியண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த போன் கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1,260×2,800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 'பஞ்ச்-ஹோல்' (punch-hole) டிஸ்பிளே
- ஆக்டா-கோர் Spreadtrum UM9360 SoC (இது Unisoc T7300 சிப்செட் ஆக இருக்கலாம்
- 8GB RAM மற்றும் Android 16-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ் உடன் வரலாம்
- 5ஜி மாடலில் உள்ளதை போன்ற 8,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கலாம்


Click it and Unblock the Notifications