பிப்.19-ல் இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) போன்கள் வரும் பிப்ரவரி 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த விவோ போன்கள்.
விவோ வி70 எலைட் அம்சங்கள் (Vivo V70 Elite specifications):புதிய விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது.
விவோ வி70 எலைட் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. 6500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அட்டகாசமான விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
விவோ வி70 அம்சங்கள் (Vivo V70 specifications): விவோ வி70 ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி70 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி70 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ வி70 ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








