ஒட்டு மொத்த சாம்ராஜ்யமே இந்த Vivo போனுக்கு வெயிட்டிங்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன்கள் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ வி70 எலைட் போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
விவோ வி70 எலைட் அம்சங்கள் (Vivo V70 Elite specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் உடன் இந்த புதிய விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஓர்ஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு நான்கு வருடம் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடம் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

6500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன். ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த விவோ வெளிவரும். தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.50,000 பட்ஜெட்டில் இந்த புதிய விவோ வி70 எலைட் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








