இந்தாங்க வச்சிக்கோங்க.. வரிசை கட்டிய VIVO .. 2 புது போன்கள்.. 4ஜி மாடல் ரூ.20,000.. 5ஜி மாடல் ரூ.40,000!
விவோ (Vivo) நிறுவனம் அடுக்கடுக்காக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. நேற்று வரையிலாக - கடந்த அக்டோபர் மாத இறுதியில் உலகளவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) தான், இந்தியாவிற்கு வரும் விவோவின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன்கள் என்று நம்பி கொண்டிருந்தோம்.
தற்போது விவோவின் அப்கம்மிங் ஸ்மார்ட்போன்களின் (Vivo Upcoming Smartphones) பட்டியலில் மேலும் 4 மாடல்கள் சேர்ந்துள்ளது. விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது; லான்ச் டேட் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் 2025 டிசம்பர் மாத வாக்கில் விவோ நிறுவனமானது விவோ எஸ்50 (Vivo S50) மற்றும் விவோ எஸ்50 மினி (Vivo S50 Pro Mini) என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்யுமென்றும், இதில் "ப்ரோ மினி" ஆனது உலகளவில் விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஆகவும், "எஸ்50" ஆனது விவோ வி70 (Vivo V70) ஆகவும் அறிமுகமாகுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் விவோ வி70 லைட்4ஜி (Vivo V70 Lite 4G) ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் எப்சிசி சான்றிதழ் தளங்களின் வழியாக லீக் ஆகி இருந்தது. இப்போது விவோ வி70 ஸ்மார்ட்போனின் இருப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
விவோ வி70, விவோ வி70 லைட் 4ஜி விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Vivo V70 and Vivo V70 Lite 4G Expected Price in India)? இந்தியாவில் விவோ வி70 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள விவோ வி70 லைட் 4ஜி மாடல் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் வரலாம்.
முன்னதாக அறிமுகமான விவோ வி60 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (Vivo V60 Price in India): இந்தியாவில் விவோ வி60 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆஸ்பிசியஸ் கோல்ட், மிஸ்ட் கிரே மற்றும் மூன்லைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் வெளியானது
விவோ வி60 ஸ்மார்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo V60 Specifications):
- 6.77-இன்ச் (1080x2392) டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்
- 6500mAh பேட்டரி
விவோ வி60 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo V60 Lite 4G Specifications):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.77-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப்செட்
- இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 ப்ரைமரி கேமரா
- 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 32எம்பி செல்பீ கேமரா
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6500mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








