இந்தியா : 24எம்பி செல்பீ கேமராவுடன் விவோ வி7 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்த புதிய விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் மாடலை நவம்பர் 24-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும்.
இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது, மேலும் சாம்பெய்ன் தங்கம் மற்றும் மேட் பிளாக் நிற வகைகளில் விவோ வி7 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெஸல்லெஸ் டிஸ்பிளே :
விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்
(1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1
நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

செல்பீ கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
விவோ வி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
விவோ வி7 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.18.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications