24எம்பி செல்பீ கேமராவுடன் விவோ வி7பிளஸ் அறிமுகம்.!
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ்.
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் என விவோ நிறுவனம் தகவல் தெரிவித்தது.
விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15 முதல் விற்பனைக்கு வரும், இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி7பிளஸ்:
விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் தங்கம், மேட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்ட் நிற வகைகளில் கிடைக்கும். மேலும் வரும் செப்டம்பர் 15முதல் இதன் விற்பனை தொடங்கும், இப்போது முன்பதிவு ஆரம்பம். இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா
விவோ வி7பிளஸ் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. f / 2.0 துளை, 1 / 2.78-இன்ச் சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோவ் அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின் இதனுடைய ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளதுää மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3225எம்ஏஎச்:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications