Just In
- 6 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 8 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 9 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- Sports
ஐபிஎல் தொடருக்கான அறிவிப்பு வெளியானது..முதல் போட்டி எங்கு?.. ரசிகர்கள் சோகம்...முழு விவரம் இதோ
- News
படையெடுக்கும் தேசிய தலைவர்கள்... 234 தொகுதிகளை விடவும் ஒற்றையாக கெத்து காட்டும் குமரி!
- Finance
ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது.. கவனமா இருங்க..!
- Movies
அந்த பிரச்சனை இருக்கு.. பிறந்தநாள் முடிஞ்ச உடனே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செல்வராகவன்!
- Automobiles
குறைந்த விலையில் பனோரமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் கார்கள்..!! கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி தற்சமயம் விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம். இதற்கு முன்பு ஓப்போ நிறுவனம் புதிய மாறுபாடுகளுடன் எஃப்5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதற்கு போட்டியாக தற்சமயம் விவோ நிறுவனம் இந்த இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பெசல்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இவற்றின் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.1:
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா :
விவோ வி7பிளஸ் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. f / 2.0 துளை, 1 / 2.78-இன்ச் சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோவ் அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின் இதனுடைய ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3225எம்ஏஎச்:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190