செல்பீ புரட்சி : விவோ வி7 ப்ளஸ் செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் அதன் விவோ வி7 ப்ளஸ் வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை அனுப்பத்தொடங்கியுள்ளது. மும்பை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி விவோ வி7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகம் நிகழவுள்ளது. அந்நாளே சாதனத்தின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் ஆகியவைகள் வெளியிடப்படும்.

விவோ வி7 ப்ளஸ் செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்.!

இந்திய சந்தையில் விவோவின் விரிவடைந்த தயாரிப்புப் பிரிவான வி தொடர் கருவிகளில் ஒரு புதிய வரவாக விவோ வி7ப்ளஸ் இணையவுள்ளது. விவோ வி 7ப்ளஸ் ஸ்மார்ட்போன பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றபோதிலும் வெளியீட்டு அழைப்பிதழில் இருந்து சில சுவாரசியமான விடயங்களை அறியமுடிகிறது.

வெளிப்படும் ஸ்மார்ட்போன் காட்சி பேனலில் இருந்து இக்கருவி கிட்டத்தட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. சென்சார்களுக்கான மேல் மற்றும் கீழ் பெஸல்கள் கூட மெல்லியதாகவே தென்படுகிறது மற்றும் ஹோம் பொத்தான் பற்றிய எந்த வெளிப்பாடும் இல்லை என்பதால் கருவியின் கைரேகை ஸ்கேனர் மறைமுகமாக பின்னால் வைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெளியான அழைப்பிதழ் இந்த ஸ்மார்ட்போன் ஆனது புரட்சிகரமான செல்பீ கேமரா கொண்டிருக்கும் எனக்கூறுகிறது. ஆக விவோ வி7 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் செல்பீ கேமரா இருக்கும் என்று இந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

விவோ வி7 ப்ளஸ் செப்டம்பர் 7-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்.!

நிறுவனம் சமீபத்தில் அதன் விவோ வி5எஸ் என்ற செல்பீ-கவன ஸ்மார்ட்போனை ரூ.18.990/- என்ற விலைக்கு அறிமுகம் செய்தது. அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் 20 எம்பி செல்பீ கேமரா திகழ்கிறது. பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ள வி5 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் (மைக்ரோ + நானோ), ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவை அடிப்படையாகக் கொண்ட பன்டச் ஓஎஸ் 3.0, முகப்பு பொத்தானில் கைரேகை சென்சார், 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்ஸல்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கண்ணாடி, கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மற்றும் 267பிபிஐ ஒரு பிக்சல் அடர்த்தி, 4ஜிபிபி ரேம் உடன் இணைந்த 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6750 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

விவி வி5எஸ் ஒரு கலப்பு இரட்டை சிம் வடிவத்தில், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்டுள்ளது, நீக்கமுடியாத 3000எம்ஏஎச்பேட்டரி கொண்டு இயங்கும் இக்கருவி அளவீட்டில் 153.8x75.5x7.55 மிமீ மற்றும் 154 கிராம் எடையுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V7+ India Launch Set for September 7, Will Be a Selfie-Focused Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X