நவம்பர் 20 : ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் விவோ வி7 அறிமுகம்.!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்,விவோ நிறுவனம் பொறுத்தவரை செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கிறது, மேலும் விவோ வி7 ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த விவோ வி7 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி7 பிளஸ்:
விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 திரை விகிதம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஒஎஸ் 3.2:
விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல்-சிம் மற்றும் ஒஎஸ் 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம், இவற்றுள் சிறந்த ஒலி அமைப்பு வசதி இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் வெளிவந்துள்ளது, அதன்பின் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி வெளிவந்துள்ளது இந்த விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஃ6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்;
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3225எம்ஏஎச்:
விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications