எனர்ஜெடிக் புளூ நிற பதிப்புடன் அசத்தலான விவோ வி7 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எனர்ஜெடிக் புளூ நிற பதிப்புடன் அசத்தலான விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது விவோ நிறுவனம். இதற்கு முன்பு மேட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் விவோ வி7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இப்போது புதிய மாறுபாடுகளுடன் இந்தியாவில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
விவோ வி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் (1440 x 720 )பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலியுடன் வெளிவந்துள்ளது, அதன்பின் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3
பாதுகாப்பு மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி வெளிவந்துள்ளது இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா :
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய
செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்;
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3000எம்ஏஎச்:
விவோ வி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 18,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications