சலுகையுடன் Vivo வி7 5ஜி போனை வாங்க ரெடியா: முன்பதிவு தொடங்கியது.. விற்பனை தேதி இதுதான்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. அதாவது இந்த போனின் விற்பனை தேதி மற்றும் சலுகைகள் குறித்த விவரங்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதாவது விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று முதல் பிளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோர்களில் தொடங்கியுள்ளது.
என்ன விலை?இந்த புதிய போன் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி27 5ஜி போனின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் ரூ.36,999-ஆக உள்ளது. குறிப்பாக நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சலுகைகள்: தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போனஸ் சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளிட்ட அட்டகாசமான சலுகைகளுடன் இந்த புதிய விவோ 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன அம்சங்கள்? விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
புதிய விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 7200 5G SoC சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 8ஜிபி/12ஜிபிரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி275ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய விவோ போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குறைந்த எடை கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே 19 நிமிடங்களில் இந்த போனை 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் புளூடூத் 5.3, வைஃபை 6,4ஜி எல்டிஇ, 5ஜி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








