இது வரட்டும் அப்புறம் இருக்கு.. 6500mAh பேட்டரி.. 200MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் விவோ வி60இ (Vivo V60e) களமிறங்க இருக்கிறது. இந்தியாவில் நாளை வெளியாக இருக்கிறது. இதுவரை உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ற பீச்சர்களுடன் இந்த விவோ வி60இ வளியாக இருக்கிறது. ஏனென்றால், பிரீமியம் போர்ட்ராய்டு மற்றும் ஸ்டைல் பொக்கெ போன்ற பீச்சர்களுடன் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதே நேரத்தில் கேமிங் பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்கும்படி 6500mAh பேட்டரி கிடைக்கிறது.

நாளை (அக்டோபர் 7) இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல ரூ.40,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான விவோ வி50இ ஸ்மார்ட்போன் ரூ.30,999 பட்ஜெட்டில் களமிறங்கியது.
ஆகவே, இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.32,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.36,999 பட்ஜெட்டிலும் இருக்கலாம். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதை பார்ப்பதற்கு முன்பாக இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.
விவோ வி60இ அம்சங்கள் (Vivo V60e Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனில் 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது. மேலும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். லேட்டஸ்ட் ஏஐ கேமரா பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்க இருக்கிறது.
ஆகவே, ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர் (AI Image Expander) பீச்சர் வருகிறது. இதுபோக முந்தைய மாடல்களில் கிடைத்த ஏஐ ஃபெஸ்டிவல் போர்ட்ராய்டு (AI Festival Portrait), ஏஐ ஃபொர் சீசன் போர்ட்ராய்டு (AI Four-Season Portrait) பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. அதேபோல மல்டி-போகல் லென்த் போர்ட்ராய்ட்கள் கிடைக்க இருக்கின்றன.
இது எடிட் செய்யமலேயே பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். இதற்கு 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது. 50 எம்பி ஐ ஆட்டோ போகஸ் (Eye Auto Focus) செல்பீ கேமரா கிடைக்கிறது. ரியர் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.
இதுபோக 30X சூப்பர் ஜூம் சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ பேஸ் பிக்ஸ் (AI Face Fix), ஐ ஏஎப் ஸ்மார்ட்ஸ் (Eye AF Smarts) மற்றும் குரூப் செல்பீ (Group Selfie) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போனில் டயமண்ட் ஷீல்டு கிளாஸ் புரொடெக்டன் கொண்ட குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. எலைட் பர்பிள் (Elite Purple), நோபல் கோல்டு (Noble Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கசிந்த விலையை பார்க்கையில், ரூ.28,749 பட்ஜெட்டில் ஆரம்ப விலையும், ரூ.32,749 பட்ஜெட்டில் டாப் -எண்ட் மாடலின் விலையும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








