தீபாவளி ஆர்டர் இதுதான்.. ரூ.3,000 ஆஃபரில் 200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ வி60இ (Vivo V60e) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 200 எம்பி கேமரா, 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.3,000 உடனடி டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆகவே, ரூ.26,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, எஸ்பிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி போன்ற முன்னணி பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். அதேபோல 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.
விவோ வி60இ அம்சங்கள் (Vivo V60e Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனின் கேமராவானது இந்திய பிரியர்களுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது. ஏற்கனவே, கிடைத்த மல்டிபோகல் போர்ட்ராய்டு (Multifocal Portrait), ஏஐ போர்ட்ராய்டு சூட் (AI Portrait Suite) மட்டுல்லாமல், ஏஐ ஃபெஸ்டிவல் போர்ட்ராய்டு (AI Festival Portrait) பீச்சர் கிடைக்கிறது.
இந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப என்ஹான்ஸ் செய்யப்பட்ட போர்ட்ராய்டு அவுட்புட்களை இந்த பீச்சர்கள் கொடுக்கின்றன. 200 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் எச்பி9 (Samsung HP9) சென்சாருடன் கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த விவோ வி60இ போனில் ஃபன்டச் ஓஎஸ் 5 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த ஃபன்டச் ஓஎஸ் மூலம் ஸ்மார்ட் ஏஐ கிடைக்கிறது. இதில் ஏஐ கேப்சன் (AI Caption), ஏஐ ஸ்மார்ட் கால் அசிஸ்டன்ட் (AI Smart Call Assistant) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் ( Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் கிடைக்கிறது. டயமெண்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே கேமிங் பிரியர்கள் மட்டும் ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது.
அதேபோல பேட்டரி சிஸ்டமும் கிடைக்கிறது. ஏனென்றால், பெரிய 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதை நிமிடங்கள் சார்ஜ் செய்து கொள்ளும்படி 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், 7.49 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. நோபல் கோல்டு, எலைட் பர்பிள் கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications