Home
Mobile

அக்.7-க்கு குறிச்சாச்சு.. 200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது Vivo போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட விவோ வி60இ (Vivo V60e) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. முன்னதாக, விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்து, பட்ஜெட் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்தது. இப்போது, வெளியீடு அதிகாரப்பூர்மாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 எம்பி மெயின் கேமரா, 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் களமிறங்க இருக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎஸ் மற்றும் டிசைன் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகின. சமீபத்தில் விலை விவரங்கள் கசிந்தன.

அக்.7-க்கு குறிச்சாச்சு.. 200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட்!

இந்த கசிந்த விலையின் அடிப்படையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.28,749ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.30,749ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,749ஆக இருக்கிறது. இது அதிகராப்பூர்வ விலைகளாக இருக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், பிளிப்கார்ட்டில் பேங்க் டிஸ்கவுண்ட்கள் போக எவ்வளவு விலை இருக்குமோ அந்த விலை அடங்கிய பக்கங்களின் விவரங்களே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த விலை மட்டுமே கசிந்தவையாக இருக்கிறது. ஆனால், கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகவே உறுதியாகிவிட்டன. இதை இப்போது பார்க்கலாம்.

விவோ வி60இ அம்சங்கள் (Vivo V60e Specifications): இந்த விவோ ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 30X சூப்பர் ஜூம் கிடைக்கிறது.

நைட் மற்றும் வெட்டிங் போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக ஏஐ ஃபெஸ்டிவல் போர்ட்ராய்டு (AI Festival Portrait), ஏஐ ஃபொர் சீசன் போர்ட்ராய்டு (AI Four-Season Portrait) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

மேலும், ஏஐ எரைஸ் போன்ற வழக்கமான பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர் (AI Image Expander) போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. செல்பீ கேமராவில் குரூப் செல்பீ (Group Selfie) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. வி சீரிஸ் மாடல்களில் கிடைப்பதை போலவே இதிலும் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) வர இருக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைக்க இருக்கிறது. இதுபோக டயமண்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது.

90W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.எலைட் பர்பிள் (Elite Purple), நோபல் கோல்டு (Noble Gold) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

மாடல் விலை
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.28,749
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ.30,749

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V60e With 200MP Camera 6500mAh Battery To Launch on October 7 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X