Home
Mobile

ரேட் எல்லாம் சொல்லிட்டாங்க! IP69 ரேட்டிங்.. 6500mAh பேட்டரி.. இந்த Vivo போனுக்கு தான் வெயிட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி60இ (Vivo V60e) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய விவோ போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் விவோ வி60இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்கள் இப்போது பார்க்கலாம்.

விவோ வி60இ அம்சங்கள் (Vivo V60e Specifications): 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (4nm octa-core MediaTek Dimensity 7300)சிப்செட் உடன் புதிய விவோ வி60இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேட் எல்லாம் சொல்லிட்டாங்க! இந்த Vivo போனுக்கு தான் வெயிட்டிங்..

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி60இ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றம் 5 வருட பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அதேபோல் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ வி60இ போன் வெளியாகும். பின்பு இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) இருப்பதாகக் கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய விவோ வி60இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

ரிங் ஃபிளாஷ் உடன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ வி60இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த விவோ போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் விவோ வி60இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. பின்பு ஐஆர் பிளாஸ்டர் ஆதரவும் இந்த போனில் உள்ளது. நோபல் கோல்ட் மற்றும் எலைட் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி60இ போன் ரூ.28,999-விலையில் வெளிவரும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண் வேரியண்ட் ரூ.30,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட ரூ.31,999 விலையிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V60e Price In India and Specifications Revealed: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X