விவோ இந்தியாவில் களமிறக்கிய புது 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே, 200MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய விவோ வி60இ 5ஜி (Vivo V60e 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 200எம்பி கேமரா, 6500mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
விவோ வி60இ 5ஜி அம்சங்கள் (Vivo V60e 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) வசதி கொண்டுள்ளது விவோ வி60இ 5ஜி விவோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10, 480Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் உடன் புதிய விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய விவோ வி60இ 5ஜி போன் வெளிவந்துள்ளது.
200எம்பி மெயின் கேமரா (Samsung HP9 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ வி60இ 5ஜி போன். பின்பு ஆரா லைட் (Aura Light), 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவுகளும் விவோ வி60இ 5ஜி போனில் உள்ளன.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி60இ 5ஜி போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய விவோ போனில் உள்ளன.

6500mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ வி60இ 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. நோபல் கோல்ட் (Noble Gold) மற்றும் எலைட் பர்பிள் (Elite Purple) நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
விவோ வி60இ 5ஜி விலை மற்றும் விற்பனை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி60இ 5ஜி போன் ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண் வேரியண்ட் ரூ.31,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும் வாங்க கிடைக்கும். அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








