முரட்டு விற்பனை.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ZIESS கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் விவோ வி70 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை முன்னிட்டு முந்தைய மாடலான விவோ வி60 (Vivo V60) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.33,999 விலைக்கு இந்த விவோ வி60 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

விவோ வி60 அம்சங்கள் (Vivo V60 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த விவோ வி60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.
4 ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. லைவ் கால் டிரான்ஸ்லேஷன் (Live Call Translation), டிராஸ்கிரிப்ட் அசிஸ்ட் (Transcript Assist) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், எரைஸ் 2.0 (Erase 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கேமரா கிடைக்கிறது.
ஆகவே, ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait), வெட்டிங் விலாக் மோட் (Wedding Vlog Mode) கிடைக்கிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ வி60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. டயமண்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சனை கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கேமராவுக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் மட்டுமல்லாமல், நைட் போட்டோகிராபிக்காக ஆரா லைட் (Aura Light) உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. 4K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த விவோ வி60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஹீட் கன்ட்ரோலுக்காக விசி ஸ்மார்ட் கூலிங் சிஸ்டம் (VC Smart Cooling System) கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) இந்த விவோ வி60 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. ஆஸ்பிசியஸ் கோல்டு (Auspicious Gold), மூன்லிட் ப்ளூ (Moonlit Blue) மற்றும் மிஸ்ட் கிரே (Mist Gray) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








