மொத்தமா மிரளவிட்ட VIVO போன்.. QUAD கர்வ் டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. ZEISS கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கும் விவோ வி60 (Vivo V60) போனானது குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா என்று ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த விவோ வி60 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் மாடல்களில் கேமரா அவுட்புட் பிரீமியமாக இருக்கும். லேட்டஸ்ட் மாடல்களில் கூடுதலாக ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கிடைக்கிறது. இந்தியாவில் இருக்கும் போர்ட்ராய்டு பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் கொடுப்பதால், அதற்கு தனி மார்கெட் உருவாகி இருக்கிறது. இந்த விவோ வி60 மாடலிலும் ஜீஸ் ஆப்டிக்ஸ் வருகிறது.

கூடுதலாக இந்த கேமராவில் வெட்டிங் விலாக் (Wedding VLog) பீச்சர் கிடைக்கிறது. இந்திய திருமணங்களுக்கு ஏற்ப இந்த பீச்சர் என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல வழக்கமாக கிடைக்கும் ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமரா மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் மாடலாக இந்த விவோ வி60 இருக்கிறது.
டிசைனை பார்க்கையில், IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. மேலும், ஒன்-டேப் வாட்டர் எஜெக்சன் (One-tab Water Ejection) மற்றும் ஃபுல் பாடி டிராப் புரொடெக்சன் (Drop Protection) கிடைக்கிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ வி60 அம்சங்கள் (Vivo V60 Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 15 கொண்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது.
இந்த விவோவில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஜீஸ் ஆப்டிக்ஸ் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்766 (SONY IMX766) சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் உள்ளது.

10X டெலிபோட்டோ ஜூம் கிடைக்கிறது. போர்ட்ராய்டு போட்டோக்களை சீசன்களாக மாற்றும்படி சம்மர், ஸ்பிரிங், ஆட்டம், விண்டர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. பெரிய 6500mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. மிஸ்ட் கிரே (Mist Gray), மூன்லைட் ப்ளூ (Moonlit Blue) மற்றும் அஸ்பிசியஸ் கோல்டு (Auspicious Gold) கலர்கள் உள்ளன.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.36,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.40,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆகவும் இருக்கிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.
பிளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோரில் ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறது. ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு 1 வருட கூடுதல் வாரண்டி மற்றும் 10 மாதங்களுக்கான ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகை கிடைக்கிறது. அதேபோல குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,700 வரையில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிரீமியம் கேமரா பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








