Home
Mobile

மிரளுது அமேசான்.. ரூ.3,700 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் விவோ வி60 (Vivo V60) போனின் விற்பனை ஆனது டிஸ்கவுண்ட் போக தொடங்கி இருக்கிறது. 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த விவோ வி60 போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.2,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.3,700 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதேபோல மற்ற வேரியண்ட்களுக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மிரளுது அமேசான்.. ரூ.3,700 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. SONY கேமரா!

மற்ற வேரியண்ட்களின் பட்ஜெட்டை பார்க்கையில், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.38,999ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.40,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. இதுபோக கூடுதல் வாரண்டி, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வருகிறது. கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்களில் மிரளவிடுகிறது.

விவோ வி60 அம்சங்கள் (Vivo V60 Specifications): சோனி ஐஎம்எக்ஸ்766 (SONY IMX766) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.

50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டமாகும். ஆகவே, ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait), ஏஐ சீசன் போர்ட்ராய்டு (AI Season Portrait), வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Wedding Portrait Studio), வெட்டிங் விலாக் (Wedding vLog) போன்ற பிரத்யேக பீச்சர்களை கொடுக்கிறது. பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

மிரளுது அமேசான்.. ரூ.3,700 டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி.. SONY கேமரா!

குவாட் கர்வ்ட் டிசைனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்படுகிறது. இந்த விவோ வி60 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) கிடைக்கிறது.

விவோ நிறுவனத்தின் ஃபன்டச்ஓஎஸ் 15 (Funtouch OS 15) மற்றும் சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கிறது. டிராப் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கிறது.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இந்த விவோ வி60 போனை மிஸ்ட் கிரே (Mist Gray), மூன்லைட் ப்ளூ (Moonlit Blue) அல்லது அஸ்பிசியஸ் கோல்டு (Auspicious Gold) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V60 With 50MP Camera Available At Discounted Price in Amazon Offer Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X